Tuesday, January 21, 2014
இலங்கை::மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித
உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம்
என எதிர்பார்க்க
ப்படுகிறது.
இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளக முரண்பாடுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்களை சீனா வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீனா, இலங்கையின் நேச நாடு எனவும் என்றென்னும் நட்புடன் திகழும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment