Wednesday, January 15, 2014

காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவு!

Wednesday, January 15, 2014
இலங்கை::காத்தான்குடி பிரதேச செயலானர் பிரிவிலுள்ள கால்பந்தாட்ட கழகங்களை ஒன்றினைத்து கால்பந்தாட்ட சங்கம் ஒன்று அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

2015ல் 100 கால்பந்தாட்ட சங்கங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக காத்தான்குடியில் காணப்படும் அனைத்து கால்பந்தாட்ட கழகங்களுக்கும் லீக் போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
 
இந்த அங்குரார்பண நிகழ்வு நேற்றைக்கு முன்தினம் காத்தான்குடி பொதுநூலக கேட்போர் கூடத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் செயலாளரும் முன்னால் உதவிப் பொலிஸ் அத்தியச்சகருமான உபாலி ஹேவகே உட்பட தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில்,அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.றுஸ்வின், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இங்கு உரையாற்றிய இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் செயலாளரும் முன்னால் உதவிப் பொலிஸ் அத்தியச்சகருமான உபாலி ஹேவகே சர்வதேச தரத்திலான கால்பந்தாட்ட மைதானம் ஒன்று காத்தான்குடியில் அமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் காத்தான்குடிக்கென தனியான ஒரு சங்கம் உறுவாக்கப்படுவது மிக முக்கியமாதுன. உலகில் 209 நாடுகள் கால்பந்து விளையாடுகின்றன. இலங்கை கால்பந்தாட்ட வீரர்களின் வருமாணத்ததை அதிகரிக்வேண்டியுள்ளது. இலங்கையில் உள்ள
 
கால்பந்தாட்ட வீரர்கள் எவரும் அரச உத்தியோகத்தர்களாக இல்லை கொத்து
ரொட்டி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களாகவே உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
24வது கால்பந்தாட்ட சங்கமாக ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்
பொதுச் செயலாளராக எம்.வை. ஆதம் அவர்களும், உப தலைவராக என்.எம்.எம். சாஹிர் அவர்களும், பொருளாளராக எஸ்.எம்.பீ.எம்.றமீஸ் அவர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment