Pages

Thursday, January 9, 2014

கொழும்பு கொள்ளுபிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்: ஸ்டீபன் ஜே ரெப்பை வெளியேற்ற கோரிக்கை!

Thursday, January 09, 2014
இலங்கை::கொழும்பு கொள்ளுபிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அமைச்சர் விமல் விரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளார் தெரிவித்துள்ளார்.
 
தற்போது கொழும்புக்கு பயணம் மேற்கொண்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை ஆராயும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே. ரேப்பை வெளியேற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
 
கொள்ளுபிட்டி சந்தியில் இருந்து பேராணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னர் நின்று கோசம் எழுப்புவதாகவும் பௌத்த பிக்குமார் உட்பட 500க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளார் தெரிவித்துள்ளார்.
 
ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பியுள்ளனர். விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க அமெரிக்கா முற்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
 
தற்போது அமைச்சர் விமல் வீரவன்ச ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment