Thursday, January 9, 2014

இலங்கையில் தொடருகின்ற இனவழிப்பிற்கு சர்வதேச விசாரணை அவசியம்: அமெரிக்க தூதுவரிடம் :(புலி கூட்டமைப்பின் சிலுக்கு சுமிதா) அனந்தி சசிதரன் தெரிவிப்பு!

Thursday, January 09, 2014
இலங்கை::இலங்கையில் தொடருகின்ற இனவழிப்பிற்கு சர்வதேச விசாரணையொன்றே அவசியமென போர்க்குற்றங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்ரீடீபன் ரெப்பிடம் தமிழ்த் தேசியக் (புலி கூட்டமைப்பின் சிலுக்கு சுமிதா) வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
 
அத்தோடு யுத்தம் முடிவடைந்துள்ளதாகவும், சமாதானம் நிலவி வருவதாகவும் அரசாங்கம் கூறி வருகின்ற நிலையில், இன்றும் இங்குள்ள தமிழ் மக்களுக்கு பாதுகாப்பில்லாதமையினால், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத நிலையில், இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள போர்க்குற்றங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ரெப், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
 
இதன் தொடராக இன்று மாலை யாழ். நகர விடுதியொன்றில் வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனையும், சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னர் அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இலங்கையில் காலம் காலமாகவே நடந்த வருகின்றது இனவழிப்பே. அதே இன வழிப்பு நடவடிக்கைகளே தற்போதும் நடைபெற்று வருகின்றது. அத்தோடு, இங்கு காணாமல் போனவர்கள் தொடர்பிலும் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை. இதற்கு நீதியானதும் பக்கச் சார்பற்றதுமான சர்வதேச விசாரணையொன்றே அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
 
இங்கு யுத்த காலத்தில் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பிலும், இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மக்களின் பாதுகாப்புகள் தொடர்பாகவும் அமெரிக்கத் தூதுவரிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன்.
 
இவ்வாறான நிலைமைகளினால் இங்கு மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியாதுள்ளதாகவும், இந்நிலைமை மாற்றப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான நிலைமையினை சர்வதேச சமுகமே ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

No comments:

Post a Comment