Pages

Tuesday, January 21, 2014

மொழி அறிவு மூலம் தேசிய நல்லிணக்கத்தினை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்!

Tuesday, January 21, 2014
இலங்கை::பொருத்தமான மொழிக் கொள்கை மூலம் நாடு சிறப்பான பாதையில் முன்னேற முடியும். வெவ்வேறு சமூகங்களிடையே காணப்படும் தொடர்பாடல் தடைகளை நீக்கி அதிக வினைத்திறனுள்ள சமூகத்தினை உருவாக்க மும்மொழிக் கொள்கையானது தற்போதைய தேவையாகும்."

மொழி அறிவு மூலம் தேசிய நல்லிணக்கத்தினை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் 18 ஜனவரி 2014 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மத்திய கல்வி அமைச்சின் மதம், கலாச்சாரம், மொழி மற்றும் மனிதநேயம் என்பவற்றிற்கான ஆலோசகர் வண.ஒமறிகஸ்ப தேரர் மற்றும் அவரது குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை சந்தித்து மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

No comments:

Post a Comment