Pages

Saturday, January 4, 2014

சுற்றுலா நுழைவிசைவில் இலங்கை வரும் பல வெளிநாட்டவர்கள் அரசியல் நடவடிக்கைகளில்: பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச!

Saturday, January 4, 2014
இலங்கை::சுற்றுலா நுழைவிசைவில்இலங்கை  வரும் பல வெளிநாட்டவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது என்று  பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
சுற்றுலா நுழை விசைவில் வரும் பல வெளிநாட்டவர்கள், தமது அனுமதிக்காலம் முடிந்த பின்னரும் இங்கு தங்கியிருக்கின்றனர்.
 
அவர்களை குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யும் போதோ, விசாரணை செய்யும் போதோ, அதை அவர்கள் மனிதஉரிமை மீறலாக திரித்துக் கூறுகின்றனர்.
 
தற்போது அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளுக்கு நுழைவிசைவு பெறுவது மிகவும் கடினமானது.
 
ஆனால் வெளிநாட்டவர்கள், மிகச்சுலபமாகவே சுற்றுலா நுழைவிசைவைப் பெற்றுக் கொண்டு  இலங்கை வரமுடிகிறது.இந்த சுதந்திரத்தை புலம்பெயர் தமிழர்கள் தவறாகப் பயன்படுத்த முனைகின்றனர்.
 
எவரேனும் நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறுவதற்கு  இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்காது.
 
தீவிரவாதம் மற்றும் குண்டுகள் தயாரிப்பில் தொடர்புடையவர்கள் எல்லாம் இப்போது மனிதஉரிமைகள் குறித்து பேச முனைகின்றனர்.
 
நாட்டுக்கு எதிராக பொய்யான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்த இவர்களை அனுமதிக்க முடியாது.
 
இவர்களுக்கு மனிதஉரிமைகள் என்ற பதத்தின் அர்த்தம் கூடத் தெரியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment