Pages

Friday, January 3, 2014

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள தகவல் திணைக்களத்தின் அலுவலகம் மீண்டும் அரசாங்க அதிபரினால் மீண்டும் திறந்துவைப்பு!

Friday, January 03, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள தகவல் திணைக்களத்தின் அலுவலகம் மீண்டும் நேற்று வியாழக்கிழமை  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலகமாக பூட்டப்பட்டிருந்த அலுவலகம் மீண்டும் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்களத்தின் அதிகாரியாக எல்.தேவஅதிரன் மாவட்ட அரசாங்க அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பட்டதாரி பயிலுனராக உள்வாங்கப்பட்ட இவர் தகவல் திணைக்கள அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment