Pages

Thursday, January 16, 2014

ஐந்தாவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நாளை முதல் துவங்குகிறது!

Thursday, January 16, 2014  
இலங்கை::யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று நர்ட்களுக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. நாளை 17,18,19 ஆகிய மூன்று நாட்களும் நடைபெறவுள்ள இக் கண்காட்சியின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகள் 17ம் தேதி காலை 9 மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
 
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இக் கண்காட்சியில் வேறுபட்ட தேவைகள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழிற்பாட்டாளர்களின் 250 இற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் இந்த வர்த்தகச் சந்தையில் இடம்பெறவுள்ளது.
 
யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு, யாழ். இராசாவின் தோட்டம் வீதியிலுள்ள வர்த்தகத் தொழில்துறை மன்றத்தில் நேற்று நடைபெற்றபோது வெளியிட்ட ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம், கைத்தொழில் மற்றும் வரத்தகத் துறை அமைச்சு, யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில்துறை மன்றம், யாழிலுள்ள இந்தியத் துணைத்தூதரகம், யாழ். மாநகர சபை இலங்கை கண்காட்சிப் பணியகம் ஆகிய தரப்பினர்களின் ஆதரவுடன் இடம்பெறுகின்றது.
 
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னரான வர்த்தகத் துறையின் நிலையுடன் தற்போதைய வர்த்தகத் துறையையும் ஒப்பிட்டுப்பார்க்கின்ற போது, தற்போதைய நிலையில் வடபகுதி வர்த்தகத்துரைற பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அதேபோன்று இந்தக் கண்காட்சியின் இயக்கமும் படிப்படியாக மாற்றமடைந்து வருவதாகவம் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது நிலைபேற்றியலுடானான ஒரு வளர்ச்சிக்கும், முதலீட்டு விரிவாக்கத்திற்கும் உகந்த வாய்ப்புக்கள் காணப்படுவதுடன், இந்தப் பிரதேசத்தில் கால்பதித்து விருத்தியடைவதற்கான அரிய வாய்ப்புக்களை உற்பத்திகளுக்கும், சேவைகளுக்கும் இச் சந்தை வழங்குகின்ற அதேவேளையில், நுகர்வோர்களும் சேவை மற்றும் தீர்வு வழங்குனர்களை நேரடியாகச் சந்திப்பதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வார்.
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2014 நிகழ்வில் உணவு, விவசாயம், இலத்திரனியல், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள், மோட்டார் சைக்கிள்கள், சுகாதாரப் பாமரிப்பு, காப்புறுதி மற்றும் பல பொருட்கள் மற்றும் பல சேவைகள் உட்பட 250 இற்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் கண்காட்சிக் கூடங்கள் இடம்பெறவுள்ளன.
 
இதில் விசேடமாக கல்விக் காட்சி கூடமானது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபலமான கல்விச் சேவை வழங்குனர்களைக் கொண்ட ஒரு பிரத்தியேக கல்விக் கண்காட்சிக் கூடமாக இடம்பெறவுள்ளது. அத்தோடு குடாநாட்டைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட கண்காட்சிக் கூடமொன்றை யாழ். வர்த்தக தொழில்துறை மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
 
வடபகுதி மக்களுக்கு இந்நிகழ்வானது வர்த்தக தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் வாய்ப்புக்களை வழங்குகின்ற வகையிலையே இக்கண்காட்சி ஏற்பாடு செய்யயப்பட்டிருப்பதாகவும், இதில் அனைத்துத் தரப்பினர்களையும் வந்து பங்கு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்

No comments:

Post a Comment