இலங்கை;:வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஷ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து
வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளார். அத்துடன் தனது பொங்கள் வாழ்த்துக்களையும் கைதிகளுக்கு
தெரிவித்திருக்கிறார்.
வட மாகாண சபைத் தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் தடுத்து
வைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வட மாகாண
சபை குரல் கொடுக்கும் என்பதுவும் ஒன்றாகும்.
அந்த வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கைதிகளை சந்தித்த முதல் நிகழ்வாக மகசீன் சிறைச்சாலைச் சந்திப்பு அமைகிறது.
தண்டணைக் காலத்திற்கு அதிகமாக
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின்
விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண
முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேச்சும் போதே அவர் இந்த நம்பிக்கையை வழங்கியுள்ளதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் இணைப்புச் செயலாளர் அத தெரணவுக்கு தெரிவித்தார்.
18, 20 வருடங்கள் என நீண்ட நாட்களாக தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளையும் வட மாகாண முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி
விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சீ.வி.விக்னேஷ்வரன்
இதன்போது தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment