Pages

Monday, January 6, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய பிளவுகள்: வெற்று வார்த்தைகளைப் பேசிப் பேசி மக்களை ஏமாற்ற முடியாது: சிவநேசதுரை சந்திரகாந்தன்!

Monday, January 06, 2014
இலங்கை::தென் பகுதியின் அர சியல் நிலைமையைப் பார்க்கும் போது, பதி னெட்டாவது திறத்த சட்டத்திற்கமைய ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் மீண்டும் இந் நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ அவர்களே தெரிவு செய்யப்படுவார்.

இதனை விடுத்து ஜெயசிக்குறுவை நடாத்திய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவோ அல்லது இறுதிக்கட்ட யுத்தத்திற்கு தலைமை வகித்தவரும், வாத்து சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவோ தெரிவாகும் சூழ்நிலை இல்லை. இந்த யதார்த்த நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அடித்துக் கூறுகின்றார் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்.

மட்/ பட்/ துறைநீலாவணை சித்தி லிநாயகர் வித்தியாலயத்திற்கென நிர்மாணிக்கப்பட்ட மாடிக்கட்டிடத் தொகுதியின் திறப்பு விழா இப்பாடசாலை அதிபர் அழகிப்போடி மனோரகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த சிவநேசத்துரை சந்திரகாந்தன் அங்கு மேலும் பேசுகையில்:-

வெற்று வார்த்தைகளைப் பேசிப் பேசி எமது மக்களை ஏமாற்ற முடியாது இன்று பிறக்கின்ற பிள்ளைகள் மிகவும் நுண்ணறிவு மிக்கவர்களாகப் பிறக்கின்றனர். இவர்களுக்கு கல்வி புகட்டும் ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பவர்களாகவும், தேடல் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் இல்லையேல், இப் பள்ளைகளுக்கு கற்பிக்க முடியாமல் திண்டாடும் நிலை ஏற்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய பிளவுகள் உள்ளமையை காணலாம். ஜோசப் பரராஜசிங்கத்திற்கு மட்டக்களப்பில் இரு அணிகளாக நின்று அஞ்சலிக் கூட்டம் நடாத்தியுள்ளனர். வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேசவுள்ளதாக கூறுகின்றார். இணைக்க அரசியல் செய்ய முயற்சிக்கின்றார். இல்லை இதற்கு அனுமதிக்க முடியாதென கூட்டமைப்புக்குள் சிலர் முரண்டு பிடிக்கின்றனர்.
இவ்வாறான பல உதாரணங்களைக் காண்பிக்க முடியும்.

மாவட்ட வெட்டுப்புள்ளியை அன்றிருந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தி,
தரப்படுத்தலை மேற்கொண்ட போது, அழகிய தமிழில் பேசி அப்பாவி தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராடி மடிய வைத்தவர்களின் பிள்ளைகளில் யாராவது தமிழ் ஈழம் கேட்டு போராடினார்களா? அவர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி கல்வி கற்பித்தனர். போராட்ட களத்தில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர் யுவதிகள் போராடி மடிந்தனர். கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி சிறையில் வாடி வாழ்வைத் தொலைத்தனர். இதுவே உண்மை.

தமிழ் மக்களின் விமோசனம் கருதியே நாம் அரசியலில் ஈடுபட்டு வருகின்றோம். தமிழ் மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலைய மேம்படுத்த வேண்டும் என்பதற்காக நாம் பொது நோக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், கருணா அம்மானுடனும் பேசி உள்ளோம். ஆனால், பொது அணக்கப்பாடு எட்டப்படவில்லை.

அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பின் கதவால் சென்று அரசாங்கத்திடம் சலுகைகளை கை நிறையப் பெற்றுவிட்டு, மக்கள் மத்தியில் உரிமை, உரிமை என்று பேசி ஏமாற்றுவது நாடகமாகும்.

பேசுவதற்கு மட்டும் சில விடயங்கள் அழகாக இருக்கும். ஆனால் அவை நடைமுறைக்கு சாத்தியமானதா என்று சிந்திக்க வேண்டும். எமது நாட்டில் இல்மனைட் உள்ளது என்று கதைக்கின்றோம். ஆனால் அந்த வளத்தைப் பெற்று உச்சப் பயன்பாட்டைப் பெற நினைக்கின்றோமா? அரசாங்கம் காட்டு யானைகளை அதிகளவில் கொண்டு வந்து விட்டுள்ளதால்

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் காட்டு யானை தொல்லைக்கு ஆளாவதாகப் பேசுகின்றனர். அப்படியாயின் அனுராதபுரம், வெலிக்கந்தை போன்ற இடங்களில் தினமும் காட்டு யானை தொல்லையினால் சிங்கள மக்கள் மரண மடைகின்றனர். சொத்துக்களை இழக்கின்றனர். அப்படியாயின் இதற்கு யார் காரணம்? மக்களை குழப்பிவிட்டு அரசியல் செய்வதை விட்டுவிட்டு மக்களைச் பாதுகாக்கும் வழிமுறைகளைச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment