Saturday, January 4, 2014
வாஷிங்டன்::அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணை தூதரக அதிகாரியாக பணியாற்றிவர் தேவயானி கோபரகேட் (39). இவர் வீட்டில் வேலை செய்த இந்திய பெண்ணுக்கு விசா பெற போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், வேலைக்கார பெண்ணுக்கு குறைவான சம்பளம் கொடுத்து, துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதன் அடிப்படையில் தேவயானியை கைவிலங்கு போட்டு அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் இந்திய - அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தேவயானியை அமெரிக்க அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி சோதனையிடுவது போன்ற வீடியோ மீடியாக்களில் வெளியாகி உள்ளது. இதனால் அமெரிக்க அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியதாவது:
தேவயானியை நிர்வாணமாக சோதனை செய்வது போன்ற வீடியோ வெளியானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். அது உண்மையான வீடியோ
அல்ல. போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயங்கரமான மோசடி. அதுபோல் எதுவும் தேவயானிக்கு நடக்கவில்லை. அமெரிக்காவுக்கு
எதிராக யாரோ இதுபோன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
எதிராக யாரோ இதுபோன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இன்டர்நெட்டில் வெளியாகி உள்ள அந்த வீடியோவில், தரையில் தேவயானியின் ஆடையை அவிழ்ப்பது போலவும், தரையில் அவர் நிர்வாணமாக
கிடப்பது போஅவர் கூச்சலிடுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

No comments:
Post a Comment