Pages

Monday, January 6, 2014

மன்னார் கரையோர மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது: அரச அதிபர் எம்.வை. எஸ் . தேசப்பிரிய!

SS646
Monday, January 06, 2014
இலங்கை::அனர்த்த முன் எச்சரிக்கை நிலையத்தின் அறிவித்தலுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில்
கரையோரப் பிரதேசங்களில் இருந்த மக்களை பாதுகாக்கும் முகமாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை. எஸ் . தேசப்பிரிய தெரிவித்தார் .
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அனர்த்த மத்திய நிலையத்தினூடாக கிடைக்கப்பெற்ற அனர்த்தம் தொடர்பான எச்சரிக்கை கிடைக்கப்பெற்றது .
 
அந்த அறிவித்தல்களுக்கமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர்கள் , முப்படையினர் ஆகியோரின் உதவியுடன் மாவட்டத்தில் உள்ள சகல மக்களுக்கும் அனர்த்தம் தொடர்பான முன் எச்சரிக்கை வழங்கப்பட்டது .
 
இந்த நிலையில் மக்கள் விழிப்படையச் செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கரையோரப்பகுதிகளில் சுமார் 100 மீற்றறுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பொது மண்டபம் மற்றும் உறவினர்களுடைய வீடுகளுக்கு அழைத்துச் செல்லுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
 
இந்த நிலையில் நேற்று ஞர்யிற்றுக்கிழமை இரவு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக கிடைக்கப்பெற்ற புதிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தின் ஊடாக சூறாவளி கடக்கும் என்ற ஐயப்பாடும் , இதனால் மன்னார் தீவுப்பகுதி பாதிக்கப்படும் என்ற தகவலும் கிடைக்கப்பெற்றது .
 
இந்த நிலையில் கடற்கரைக்கு சுமார் 200 மீ . உட்பட்ட பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு எமக்கு கிடைக்கப்பெற்ற அறிவித்தலுக்கு அமைவாக குறித்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 5-1-2014 ) நள்ளிரவு வரை இடம் பெற்றது .
 
இந்த நிலையில் குறித்த சூறாவளி செயலிழந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது .
 
எனினும் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை மீனவர்களை தொழிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது .
 
இந்த நிலையில் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அனுமதியளிக்கப்படவில்லை .
 
தொடர்ந்தும் 2 ஆவது நாட்களாக மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை . மறு அறிவித்தல் கிடைக்கும் வரை இவர்களை தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது .
 
தொடர்ந்தும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனின் அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் . என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை. எஸ் . தேசப்பிரிய மேலும் தெரிவித்தார் .

No comments:

Post a Comment