Thursday, January 09, 2014
சென்னை::இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுடனான பேச்சு வார்த்தை ஜனவரி 20-ல் நடத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக இருநாட்டு சிறைகளிலும் இருக்கும் மீனவர்களை விடுவிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இதை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உறுதி செய்துள்ளார். “பேச்சு வார்த்தைக்கு முன்பாக நல்லெண்ணம் கருதி தமிழகம் மற்றும் ஆந்திர சிறைகளில் இருக்கும் இலங்கை மீனவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல், இலங்கையின் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களையும் அதன் அரசு விடுவிக்கும் என நம் மத்திய அரசு ஆவலுடன் எதிர்பார்க்கிறது” என்றார்.
இதேபோல், இலங்கையின் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களையும் அதன் அரசு விடுவிக்கும் என நம் மத்திய அரசு ஆவலுடன் எதிர்பார்க்கிறது” என்றார்.
இந்த விடுதலையை, தமிழர்கள் திருநாளான பொங்கல் தினத்திற்குள் செய்யவும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய சுதர்சன நாச்சியப்பன், ‘இந்த கூட்டத்தை நடத்த இருப்பது தமிழக அரசுதான். இதில், இலங்கையிலிருந்து வருபவர்களுக்கு விசா அளிப்பது போன்ற உதவிகளை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது.
இந்தக் கூட்டத்திற்கு, தமிழக அரசு அளித்த ஒத்துழைப் பின் அடிப்படையில்தான், மத்திய அரசு முழு முயற்சியும் செய்து வருகிறது.’ எனக் கூறினார்.
இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் உள்ளிட்ட 4 அமைச்சர்கள், நான்கு உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மீனவர்கள் சார்பில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், தஞ்சாவூர், காரைக்கால் மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் 6 பேர் பங்கேற்பர். இதற்கான தகவல் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு இன்னும் அனுப்பப்பட வில்லை என்றனர்.

ஜனவரி 20-ல் கூட்டம் உறுதியாக நடக்குமா எனத் தெரியவில்லை. இலங்கை அரசு கூட்டம் தொடர் பாக எவ்வித பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து மத்திய வெளியுறத்துறை துணை செயலாளர் மயாங் ஜோஷி கூறுகையில், “இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகி விட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறத்துறை துணை செயலாளர் மயாங் ஜோஷி கூறுகையில், “இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகி விட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதை இலங்கை அரசுக்கு தெரிவித்து உள்ளோம். அவர்களிடம் இருந்து
இன்னும் பதில் வரவில்லை. அது விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம். இது பற்றி நீங்கள் இலங்கையில் தூதரகத்தில்தான் கேட்க வேண்டும்” என்றார்.
இலங்கையில் உள்ள சிறைகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 313 பேர் உள்ளனர். அதேபோல், தமிழகம், ஆந்திரா மற்றும் ஒரிசா சிறைகளில் சுமார் 200 இலங்கை மீனவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் உள்ள சிறைகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 313 பேர் உள்ளனர். அதேபோல், தமிழகம், ஆந்திரா மற்றும் ஒரிசா சிறைகளில் சுமார் 200 இலங்கை மீனவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment