Friday, January 3, 2014

நாட்டின் நலனுக்காக பாடுபடுவதே தேசியவாதமாகும்- மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Friday, January 03, 2014
இலங்கை::நாட்டின் நலனுக்காக பாடுபடுவதே தேசியவாதமாகும் என மீன்பிடித்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தேசியவாதம் என்ற பெயரில் ஒரு நாட்டுக்கு எதிராக செயற்படுவது ஆபத்தானது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
தேசியவாதம் என்பதனை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தமிழ் பத்திரிகை ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கிலிருந்து பிரசுரமாகும் சில செய்தித் தாள்கள், இனக் குரோதத்தை தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியை கடந்து வரும் நாம், பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டியது அவசியமானத என அவர் குறிப்பிட்டுள்ளார்.


 

No comments:

Post a Comment