Pages

Monday, January 13, 2014

மன்னார், யாழ்ப்பாண பேராயர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கர்தினால்!

மன்னார், யாழ்ப்பாண பேராயர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது – கர்தினால்
Monday, January 13, 2014
இலங்கை::மன்னார் மற்றும் யாழ்;ப்பாண பேராயர்களினால் சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச் சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
 
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ்ப்பாண பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் இலங்கை அரச படையினர் இரசாயன ஆயுதங்களையும், கொத்தணி குண்டுகளையும் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க யுத்தக் குற்றச் செயல் பிரதிநிதி ஸ்டீவன் ரெப்பை சந்தித்த மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.

எனினும், குறித்த பேராயர்களின் கோரிக்கைக்கு இலங்கை கத்தோலிக்க பேராயர் பேரவை ஆதரவளிக்காது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment