Monday, January 6, 2014

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கரையோரத்தில் வாழும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை: வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி!

Monday, January 06, 2014
இலங்கை::அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கரையோரத்தில் வாழும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
 
இதனையடுத்து கரையோர பிரதேசத் திலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் நேற்றுக் காலை முதல் மேற்கொள்ளப்பட்டன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்ட அரசாங்க அதிபர்கள் அலுவலகங்கள், பிரதேச செயலாளர்கள் கிராம சேவகர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை தொடர்பில் காலை முதல் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டதுடன் அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
வானொலி, தொலைக்காட்சி, ஒலிபெருக்கிகள் பொதுத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சகல தரப்பினரும் செயற்பட்டதுடன் கரையோரத்திலிருந்து 150 மீற்றர் தொடக்கம் 200 மீற்றர் பிரதேசத்திற்கு அப்பால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தார்.
பாதிப்புக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படும் சகல பகுதிகளிலும் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை கடற்படையின் உதவியுடன் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment