Thursday, January 02, 2014
இலங்கை::இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நோக்கிச் பயணிக்கவிருந்த நபரே இன்று (02) காலை கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்
து 4.5 கிலோ கிராம் தங்க பிஸ்கட்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பெறுமதி 22 மில்லியன்களாகும் என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் பம்பலபிட்டியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திரப் பாகங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கப் பேச்சாளர் கூறினார்.
சந்தேகநபரை கைதுசெய்த விசாரித்தபோது, பழுதடைந்த இயந்திர பாகங்களை திருத்துவதற்காக சென்னைக்கு எடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டதாக சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் லெஸ்லி காமினி மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment