Pages

Saturday, January 4, 2014

தமிழக மீனவர்கள் 30 பேருக்கு ஜன.17 வரை காவல் நீட்டிப்பு!

Saturday, January 4, 2014
இலங்கை::சிறையிலிருக்கும் தமிழக மீனவர்கள் 30 பேருக்கு மீண்டும் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்து உத்திரவிட்டது.
 
கடந்த நவம்பர் 5 அன்று கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 17 மீனவர்களையும் அவர்களின் 4 படகுகளையும், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தீவைச் சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மீனவர்களின் வலைகளையும், பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.
 
பின்னர், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரையும் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று மீனவர்களை விசாரிக்கப்பட்டனர்.
 
அதைத் தொடர்ந்து, யாழ்பாணம் மாவட்டம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த மீனவர்களை காவலில் வைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 30 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், தமிழக மீனவர்கள் 30 பேரின் காவல் வெள்ளிக்கிழமை முடிவடைந்ததை அடுத்து, மல்லாகம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த மல்லாகம் நீதிபதி கஜநிதி பாலன் ஆறாவது முறையாக காவலை நீட்டித்து ஜனவரி 17 வரை காவலில் வைக்க உத்திரவிட்டார். 
 

No comments:

Post a Comment