Pages

Saturday, January 4, 2014

ரூ.3 லட்சம் நகையை அடகு வைத்து: இலங்கை தமிழ் பெண்ணிடம் அடகு கடைக்காரர் நூதன மோசடி!

Saturday, January 4, 2014!
சென்னை::இலங்கை தமிழ் பெண்ணிடம் நூதன முறையில் நகை மோசடி செய்த ராஜஸ்தான் அடகுக்கடைக்காரர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 4 முறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் வடித்தார். இலங்கையை சேர்ந்த மாற்றுத் திறனாளி தமிழ் பெண் லிங்கராணி. சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் குடியேறி னார். 3 ஆண்டுகளாக போரூர் ராஜகோபால் நகரில் மகளுடன் வசித்து வருகிறார். லிங்கராணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

மருத்துவ செலவுக்காக எனது நகையை அருகில் உள்ள அடகு கடையில் வைப்பது வழக்கம். கடை உரிமையாளர் ராஜஸ்தானை சேர்ந்த ராஜேஷ்குமார். 2008ல் ராஜேஷ் குமார் என் வீட்டுக்கு வந்தார். விருந்தினர் வீட்டு சுப நிகழ்ச்சி நடக்கிறது. மனைவிக்கு அணிய இப்போது நகை இல்லை. உங்கள் நகைகளை தாருங்கள். 10 நாட்களில் திருப்பி தந்து விடுகிறேன் என்று கெஞ்சினார்.

பரிதாபப்பட்டு நானும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 13 சவரன் நகையை கொடுத்தேன். ஆனால் அவர் நகைகளை திருப்பி தரவில்லை. இதோ தருகிறேன் என்று சொல்லியே காலம் கடத்தினார். இந்நிலையில் எனக்குத் தெரியாமல் என் நகையை அசோக் நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் ஒன்றில் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்திற்கு அடகு வைத்து அவர் பணம் பெற்றது தெரிந்தது. இதுகுறித்து, ராஜேஷ்குமாரிடம் கேட்டபோது, குடும்ப கஷ்டத்தில் அடகு வைத்து விட்டேன் என்று அடகு வைத்த ரசீதை என்னிடம் கொடுத்து நீங்கள் வட்டியை மட்டும் கட்டுங்கள் நகையை சில மாதங்களில் மீட்டு தருகிறேன் என்று உறுதி அளித்தார்.

வட்டியை நான் கட்டினேன். இதற்கிடையில் எனக்குத் தெரியாமல் நகையை மீட்டு அதை விற்று விட்டார். எனவே ராஜேஷ்குமார் மீது நடவடிக்கை எடுத்து எனது நகையை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி உள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் 4 முறை புகார் அளித்துள்ளேன். இதுவரை நடவடிக்கை இல்லை என்று லிங்கராணி கண்ணீர் வடித்தது பரிதாபமாக இருந்தது.

No comments:

Post a Comment