Saturday, January 18, 2014
இந்திய - இலங்கை மீனவர் விவகாரம் குறித்து இரு
நாடுகளுக்கு இடையே 20ம் தேதி நடைபெற இருந்த பேச்சவார்த்தை 27ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டு
ள்ளது.இந்திய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் இலங்கை பிரதிநிதிகளை தேர்வு செய்ய மத்திய அரசிடம் இலங்கை கால அவகாசம் கோரியது. மேலும், இலங்கை சிறைகளில் உள்ள மீதமுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு இலங்கை அரசு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இலங்கை அரசின் வேண்டுகோள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, ஜனவரி 20ம் தேதி நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒத்திவைத்துள்ளார். இதனால், இலங்கை - தமிழக மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை ஜனவரி 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment