Friday, January 3, 2014

யாழ் /பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 215 பேர் கைது!

ai49
Friday, January 03, 2014
இலங்கை::யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால் பல்வேறு குற்றச் செயல்களுடன்
தொடர்புடைய இரு நூற்றி பதினைந்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ . நிஹால் பெரரொ யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் இடம் பெற்ற ஊடகவியலாளாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .
 
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையங்களினால் அடித்துக் காயப்படுத்திய சம்பவங்கள் சம்பந்தமாக 34 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்தியது சம்பந்தமாக 12 பேர் கத்தியால் வெட்டியது சம்பந்தமாக ஒருவர் அத்துமீறி வீட்டில் பிரவேசித்தது சம்பந்தமாக 03 பேர் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக 07 பேர் பொது இடத்தில் மது அருந்தியது சம்பந்தமாக 02 பேர் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டது சம்பந்தமாக ஒருவர் சந்தேகத்தின் பெயரில் 02 பேர் பிடியானை சம்பந்தமாக 32 பேர் சந்தேகத்திற்க்கு இடமாக விதியில் நடமாடியவர்கள் பேர் களவு சம்பந்தமாக 04 07 15 பேர் மற்றும் குற்றங்கள் சம்பந்தமாக பேருமாக நூற்றி இருபத்தியிரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .
 
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் பாரிய குற்றச்செயலகள் சம்பந்தமாக 04 பேர் சட்டவிரோதமான மது விற்பனை சம்பந்தமாக 02 பேர் பிடியானை சம்பந்தமாக 11 பேர் ; சந்தேகத்தின் பெயரில் 11பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய 06  பேருமாக ஏனையகுற்றங்கள் சம்பந்தமாக பேருமாக தொன்னூற்றி மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .
 

No comments:

Post a Comment