Pages

Friday, January 17, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ம் திகதி யாழ்.குடாநாட்டிற்கு வருகை: 300 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் புற்றுநோய் வைத்தியசாலை தெல்லிப்பளையில் 19ம் திகதி அடிக்கல் நாட்டு!

Friday, January 17, 2014
இலங்கை::யாழ்.தெல்லிப்பளையில் கலர்ஸ் ஒவ் கரேஜ் அமைப்பின் 300மில்லியன் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய புற்றுநோய் வைத்தியசாலையின் திறப்பு விழா மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான ‘லீனிய அக் சிரலேற்றர்’ சிகிச்சை கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளிற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ம் திகதி யாழ்.குடாநாட்டிற்கு வருகைதரவுள்ளார்.

கலர்ஸ் ஒவ் கரேஜ் அமைப்பினால் புதிய வைத்தியசாலைக் கட்டிடத்தில் நேற்றய தினம் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் அமைப்பின் பிரதிநிதிகள் நாதன் சிவகணநாதன், மற்றும் சரிந்த உணப்புவ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுமகையிலேயே மேற்படி ஜனாதிபதியின் விஜயம் தொடர்பாக தெரிவித்தனர்.
 
சந்திப்பில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, மாத்தளை தொடக்கம் யாழ்.பருத்துறை வரையான நடைபயணத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் 300மில்லியன் ரூபா நிதி செலவில் மேற்படி வைத்தியசாலை அமைக்கப்பட்டி ருக்கின்றது. மேற்படி நடைபயணத்தில் இன வேற்றுமைகளைக் கடந்து அனைத்து மக்களும் எங்கள் நோக்கத்திற்கா க தங்களாலான உதவிகளை வழங்கினார்கள்.
 
எனவே இந்த வைத்தியசாலை இலங்கை மக்களின் வைத்தியசாலையாக நாங்கள் பார்க்கிறோம். மேலும் வடக்கில் இவ்வாறான வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை இதுவரையில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் 1970களில் இவ்வாறான வைத்தியசாலை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், நாட்டின் அசாதாரண சூழ்நிi லகளினால் அது சாத்தியமற்றுப்போனது.
 
இந்நிலையில் வடமாகாண மக்கள் அல்லது நோயாளர்கள் தங்கள் மருத்துவ தேவைகளுக்காக மஹரகம வைத்திய சாலைக்கே செல்லவேண்டியிருந்தது. எனினும் தற்போது அந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த வைத்தியசாலையில் பிரத்தியேகமான பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு, சிறுவர் விடுதி, சிறுவர் பூங்கா போன்றனவும் அமைக்கப்பட்டுள்ளதுடன்,
 
நோயாளர் விடுதிகள் அனைத்தும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர் பூங்கா, தொலைக்காட்சி வசதிகள் மற்றும் நோயாளர்கள் பற்றிய விபரங்கள் கணனிமயப்படுத்தப்பட்டும் இருக்கின்றது. இதேபோன்று இந்த வைத்தியசாலை அமைப்பதற்கான 4ஏக்கர் நிலத்தினை தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் மற்றும் மாணிக்கசோதி அபிம ன்ன சிங்கம் ஆகியோர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
 
இவர்களைப் போன்றே எங்கள் நடைபயணத்தின்போது சிறுவர்கள், வயதானவர்கள், இன, மத பேதமின்றி அனைத்துச் சாராரும், வெளிநாடுகளில் உள்ள முகம்தெரியாத நபர்களும் எங்கள் நோக்கத்திற்காக எமக்கு நிதி வழங்கியிருக்கின்றார்கள். அவர்களை நாங்கள் நினைவில் கொள்ளுகின்றோம். நன்றிகளையும் தெரிவிக்கின்றோம். மேலும் 500ரூபாவி ற்கு மேல் வழங்கிய 8ஆயிரம் பேரின் பெயர்களை நாங்கள் வைத்தியசாலையில் காட்சிப்படுத்தியிருக்கிறோம்.
 
நாங்கள் மீண்டும் கூறுகின்றோம். இந்த வைத்தியசாலை இலங்கையர்களுடைய வைத்தியசாலை, அதனை திறந்து வைப்பதற்கும், புற்றுநோய்க்கான மேலதிக சிகிச்சைப் பிரிவு ஒன்றிணைத் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவதற்கும் ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மேலும் இந்நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு ஜனாதிபதியுடன் சுகாதார அமைச்சர் மற்றும் மத்திய 
 
அமைச்சர்களும் வருகை தருவார்கள். என தெரிவித்தனர். மேலும்  யாழ்.பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ.கேதீஸ்வரன், வைத்திய கலாநிதி எம்.உமாசங்கர் ஆகியோரும் நேற்றய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
 
இதேபோன்று பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மேற்படி புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கு உதவிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன், வடமாகாண மக்களின் தேவைகளை பூர்திசெய்யும் வகையிலான மிக முக்கியமான ஒரு வசதி மாகாணத்திற்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment