Saturday, January 4, 2014

ஜங் சாங்கை நிர்வாணப்படுத்தி 120 நாய்க்கு இரையாக்கிய கொடூரம்!

Saturday, January 4, 2014
சியோல்::வட கொரிய அதிபர் கிம் ஜாங், தனது மாமாவும் அரசியல் உயர் மட்ட தலைவருமான ஜங் சாங் தேக்கை நிர்வாணப்படுத்தி 120 நாய்களுக்கு இரையாக்கிய பகீர் தகவல் அம்பலமாகி உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கின் மாமா ஜங் சாங் தேக். இவர் கட்சியின் உயர் மட்ட தலைவராகவும், அதிபர் கிம் ஜாங்குக்கு அரசியல் வழிகாட்டியாகவும் பொறுப்பு வகித்தார். இளம் வயதிலேயே கிம் ஜாங், அதிபர் பதவியை அடைய அவரது வழிகாட்டுதல் மிகவும் உதவியது. இந்நிலையில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும் சதி செய்ததாகவும் ஜங் சாங் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து ஜங் சாங் தேக்குக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
 
அதன்படி, இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்டு ஜங் சாங்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாயின. ஆனால், அவரை நிர்வாணப்படுத்தி 120 நாய்களுக்கு இரையாக்கி உள்ளனர் என்று சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய பத்திரிகைகளில் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.
 
அந்த பத்திரிகைகளில்கூறியிருப்பதாவது:-
 
ஜங் சாங்கை நிர்வாணமாக்கி, பல நாட்களாக பட்டினி போடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 120 காட்டு நாய்களுக்கு அவரை இரையாக வீசி உள்ளனர். பசி வெறியில் அந்த நாய்கள் அவரை கடித்து குதறி கொன்று தின்றுள்ளன. ஜங் சாங்குடன் அவருக்கு உதவியாக 5 பேரும் நாய்களுக்கு இரையாக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கொரியாவின் லீட் பல்கலை அரசியல் துறை பேராசிரியர் எய்டன் போஸ்டர் கார்டர் கூறுகையில்,
 
எது எப்படி இருந்தாலும் உயர்மட்ட தலைவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். வட கொரியாவில் அரசு எவ்வாறு பயங்கரமாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனால் சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment