இலங்கை தமிழ் / சிங்கள செய்திகளை பார்வையிட
------------------------------------------------------------------------------------------------------------------------
Saturday, December 14, 2013
இலங்கை::சென்னை::சென்னை பன்னாட்டு விமான நிலையம் வழியாக போதைப் பொருட்கள், தங்கம் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூர், இலங்கை மலேசியா, துபாய், மற்றும் அரபு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுகின்றன.
இதுபோல சென்னையில் இருந்து கொழும்பு, பாங்காக், மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் (கேட்டமின்) கடத்தப்படுவதாக புகார் இருந்து வருகிறது.
கடந்த மாதம் சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த காஜா என்பவர் கோலாலம்பூருக்கு 48 கிலோ போதைப் பொருட்கள் கடத்தி சென்ற போது அந்நாட்டு சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார். அவனை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வழியாக கடத்தல் சம்பவம் நடப்பதை தடுக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையகம் சென்னை விமான நிலைய இயக்குனர் சுரேஷ் மற்றும் சுங்கத்துறை ஆணையர் அகர்வாலுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், சென்னை விமான நிலையம் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வருவதையும் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்திடம் இருந்து கடிதம் வந்ததை தொடர்ந்து சென்னை அதிகாரிகள் உஷார் அடைந்தனர். உயர் அதிகாரிகளின் கடிதத்தால் கலக்கம் அடைந்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment