Wednesday, December 18, 2013
இலங்கை::காணி உரிமைகள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற காணி விவகாரங்களோடு தொடர்புடைய அமைச்சுகளுக்கே உரியது என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தத்திற்கு அமைய குறித்த இடத்தில் வர்த்தக நோக்கத்துக்காக காணி ஒதுக்குவது பற்றி மாகாண சபைகள் முடிவெடுக்க முடியுமா என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மாகாண காணி ஆணையாளர்கள் இறுதியாக தொடர்புடைய அமைச்சரிடம் அனுமதிபெற வேண்டும் என்றும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.
முல்லைத்தீவு பகுதியில் காணிகள் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டனவா எனவும் ரவி கருணாநாயக்க எம்.பி கேட்டார்.
இதனை மறுத்த அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் 62 ஹெக்டேயர் பரப்பளவுள்ள 11 காணிகள்,காணி அனுமதிப்பத்திரம் பெற்றோருக்கும்,சுவர்ணபூமி திட்டத்திற்கு கீழ் பகிரப்பட்டன என அமைச்சர் கூறினார்.
இந்த காணிகள் அரசாங்க திணைக்களங்களுக்கு தேவைக்கேற்ப வழங்கப்பட்டன. இவை காணிச்சட்டங்களுக்கு அமையவே செய்யப்பட்டன என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

No comments:
Post a Comment