Friday, December 13, 2013
சென்னை::தமிழக இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்வது ஏன்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நேற்று மாலை 7 மணி அளவில் நான் வீட்டிலிருந்து புறப்பட்டு காரில் ஏறுகின்ற நேரத்தில் செய்தியாளர்கள் சுமார் 20 பேர் காத்திருந்தார்கள். இது தினந்தோறும் நடக்கும் நிகழ்வு. ஜெயலலிதா முதல்வர் பதவியேற்றவுடன் அளித்த பேட்டியில், நான் வாரம் ஒருமுறை தவறாமல் செய்தியாளர்களை சந்திப்பேன் என்று உறுதிமொழி கூறிய பின்னரும், அவர் உறுதியளித்தபடி செய்தியாளர் களை சந்திப்பதில்லை.
நேற்று நிருபர்கள் என்னைப் பார்த்ததும், நாகைக்கு அருகே இந்திய மீனவர்கள் 100க்கு மேற்பட்டவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்திருக்கிறதே என்று கேட்ட போது, இதில் மத்திய அரசும், மாநில அரசும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று பதிலளித்தேன்.
இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளும், இலங்கை மீனவர்களின் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய இந்திய அரசு, தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு எழுதியிருக்கிறது, இன்னும் ஒப்புதல் வரவில்லை என்று மத்திய அரசின் சார்பில் சில அமைச்சர்கள் தெரிவித்திருந்ததை பற்றிக் கேள்வி கேட்டார்கள். அதற்கும், நான் முதலில் ,இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்த வேண்டுமென்று பதிலளித்திருந்தேன்.
ஆனால் இன்றளவும் மத்திய அரசு தெரிவித்திருந்ததைப் போல 2 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு மாநில அரசு என்ன பதில் அனுப்பியது என்றும் தெரியவில்லை.
80 நாட்களைக் கடந்தும், 4 முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டும் இன்று வரை விடுவிக்கப்படாத காரைக்கால் மீனவர்கள் 32 பேரையும், அவர்க ளது 4 படகுகளையும் மீட்க இதுவரை உருப்படியான முயற்சிகள் எதையும் மத்திய, மாநில அரசுகள் எடுக் காத நிலையில், தற்போது 200க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்திருக்கிறார்கள்.
அனைவரையும் கைது செய்திருக்கிறோம்; மீறி ஏதாவது பேசினால் சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டி அனைத்து படகுகளையும் இலங்கைக்குக் கொண்டு செல்ல முயற்சித்த நேரத்தில், நமது மீனவர்கள் நாகைக்கு தகவல் சொல்லி, வெளியுறவுத் துறை மூலம் இலங்கை அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக, சிறைப்பிடித்த 32 படகுகளில், 17 படகுகளையும் அதில் இருந்த 125 பேரையும் இலங்கைக் கடற்படையினர் விடுவித்திருக்கிறார்கள். மீதமுள்ள 15 படகுகளையும், அதில் இருந்த 100 மீனவர்களையும் திரிகோணமலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
2011ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பின்னர் கடைப்பிடித்து வரும் தவறான அணுகுமுறைகளாலும், அக்கறையற்ற நடவடிக்கைகளினாலும் வேளாண்மையும், நெசவும் பெருமளவு நலிவடைந்து விட்டன. பல லட்சம் விவசாயிகள் அதிமுக அரசின் அலட்சியப் போக்கால், வேளாண்மையை கைவி ட்டு விட்டனர்; பல லட்சம் நெசவாளர்கள் மாநில அரசின் அனுசரணை இல்லாததால், வறுமைக்குழிக்குள் தள்ளப்பட்டு கஞ்சித் தொட்டிகள் திறக்குமளவுக்குச் சென்றுவிட்டனர்.
மீனவர்களின் வாழ்வாதாரமும், மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையின்மையால் கேள்விக்குறியாகிவிட்டது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்ப டுவதும், சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் அன்றாட நடைமுறைகளாகி விட்டன. விவசாயிகள் நெசவாளர் மீனவர் நிலை நெஞ்சத்தைக் குடைகின்றன.
நேற்றையதினம் மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்த தகவல் என்று வந்துள்ள செய்தியில், 2 நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பது தொடர்பாக, தமிழக அரசுடன் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்திவருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் நமக்குள்ள வருத்தம் 2 நாடுகளின் மீனவர்களும் சந்தித்துப் பேசுவது பற்றி, இந்திய அரசு நமது மாநில அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும், மாநில அரசுடன் அதைப் பற்றி ஆலோசனை நடத்தி வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே தவிர, நமது மாநில அரசு இந்த முக்கியப் பிரச்னையில் வீண் காலதாமதத்தை ஏற்படுத்தி வருவதற்கு என்னதான் காரணமோ என்று தெரிய வில்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment