Thursday, December 19, 2013
ராமேஸ்வரம்::தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி, பா.ஜ., சார்பில்
ராமேஸ்வரத்தில், ஜன., 31ல் கடல் தாமரை போராட்டம் நடைபெறும்,'' என, பா.ஜ., மாநில
தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தனுஷ்கோடி கம்பிபாடு மீனவர்கள், 100 பேருக்கு, தனியார் நிறுவனம் ஏற்பாட்டில்,
இலவச சோலார் மின்விளக்கை, பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின், ராமேஸ்வரத்தில்
புதிய உறுப்பினர்கள், 200 பேர் பா.ஜ.,வில் இணையும் விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
அடுத்தாண்டு, பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன், தனுஷ்கோடிக்கு ரயில் விடப்படும்.
மீனவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும். ராமேஸ்வரம், புனித தீவாக அறிவிக்கப்படும்.
தமிழகத்தில், பா.ஜ., யாருடைய கூட்டணியையும் எதிர்பார்க்கும் நிலையில் இல்லை.
லோக்சபா தேர்தலில், தனிப் பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைப்போம். தமிழக மீனவர்கள்
கைது செய்யப்படுவதையும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகள் இலங்கையில்
சேதமாவதையும் தடுக்காமல், மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது
வேதனைக்குரியது.
மீனவர்களுக்காக, தமிழக எம்.பி.,க்கள் ஒருவர் கூட, லோக்சபாவில்
குரல் எழுப்பவில்லை. பா.ஜ., சார்பில் சுஷ்மா சுவராஜ், மத்திய அரசிடம்
எடுத்துரைத்தார். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, ஜன.,31ல்,
ராமேஸ்வரத்தில், சுஷ்மா சுவராஜ் தலைமையில் "கடல் தாமரை' போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment