Pages

Monday, December 9, 2013

வவு­னியா வடக்கில் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்­டோரில் தொன்னூறு வீத­மா­னோ­ருக்கு வீட்­டுத் திட்டம் வழங்­கப்­பட்­டுள்­ளது. பிர­தேச செய­லாளர் பரந்­தாமன்!

Monday, December 09, 2013
இலங்கை::வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களில் 90 வீதமானவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க . பரந்தாமன் தெரிவித்தார் .
 
சமூக நல்லிணக்கம் தொடர்பான பிரதேச மட்ட கூட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ரஜீவ விஜயசிங்க தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார் .
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:-
வவுனியா வடக்கில் அனைத்து திணைக்களங்களும் இணைந்து செயற்படுவதன் காரணத்தால் நாம் அடைவு மட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளோம் .இந் நிலையில் மேலும் எமது செயற்பாடுகளை முன்னோக்கி செயற்படுத்த நல்லிணக்கம் தொடர்பான இக் கூட்டங்கள் பயனுறுதி மிக்கதாக அமையும் . இது திணைக்களங்களின் பங்களிப்புக்கான சிறந்த தருணமாக கருதிக்கொள்ளக் கூடியதாகவுள்ளது .
 
இந் நிலையில் வவுனியா வடக்கில் பல உள்ளூர் வீதிகள் திருத்தம் செய்யப்படாமல் உள்ளதால் விவசாயத்தை மையமாக கொண்ட இப்பகுதி மக்கள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் .
 
இவ்வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு போதுமான நிதி வசதிகள் பிரதேச சபைகளிடம் இன்மையால் இதனை புனரமைப்பு செய்வதற்கு போதுமான நிதியுதவிகள் தேவைப்படுகின்றன .
 
இதேவேளை பிரதேச செயலகத்தில் 42 முகாமைத்துவ உதவியாளர்கள் தேவைப்படும் நிலையில் 4 முகாமைத்துவ உதவியாளர்களே உள்ளனர் . இதன் காரணமாக பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்

No comments:

Post a Comment