Pages

Sunday, December 15, 2013

புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் வாகனம், முச்சக்கர வண்டியுடன் மோதி மூவர் பலி!

Sunday, December 15, 2013
இலங்கை::புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் வாகனம், முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரிக்க, போக்குவரத்து மத்திய நிலைய உதவிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் - சிலாபம் வீதியில், மதுரன்குளி - கரிகட்டிய பிரதேசத்தில், இன்று  அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் வாகனம் முன்தல பொலிஸில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, மீண்டும் புத்தளத்திற்கு திரும்பும்போது இவ் விபத்து நேர்ந்துள்ளது.
 
இவ்விபத்தில் மங்களஎளிய மரிச்சிக்கட்டு எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிரிமால் மதுசங்க, அகில மதுஷான் மற்றும் திலான் மதுசங்க ஆகிய இளைஞர்கள் மூவரே உயிரிழந்தவர்களாவர்.

No comments:

Post a Comment