Tuesday 10 December 2013
இலங்கை::இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு வெற்றிகாரமான அரசியல் தீர்வை காண வேண்டுமாயின் அயல் நாடான இந்தியாவின் உதவி இலங்கைக்கு அவசியம் என்பதால் தான் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக (mad man)மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் இலங்கைக்கு மிகவும் அருகில் இருக்கும் தமிழகம் தேசியப் பிரச்சினைக்கான தீர்வில் நேர்வையான தூண்டு கருவியாக இருக்க வேண்டும்.
அதேபோல் இலங்கையின் வடக்கு கிழக்கு தனி நாடாக உருவாக்கினால் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழகம் துண்டுகளாக பிரிந்து செல்லும் என்பதை நான் தமிழக முதல்வருக்கு சுட்டிக்காட்ட எண்ணியுள்ளேன் என மனோ கணேசன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வரை சந்திப்பதற்கான நேரம் கிடைத்ததும் தான் அவரை சென்று சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment