Pages

Monday, December 9, 2013

ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதியான யாசூசி அகாஷி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சு!

Monday, December 09, 2013
இலங்கை::இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதியான யாசூசி அகாஷி இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
 
 ஜனாதிபதி  மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 
 
இந்த சந்திப்பின்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் காணப்படும் முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுக்களும் இந்த சந்திப்பின் போது இடம்பெற்றுள்ளது.

ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை  இலங்கைக்கு வருகை தந்த யசூசி அகாஷி  எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையிலும் இங்கு தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பாகவும் ஜப்பான் இலங்கை நல்லுறவுகள் தொர்பாகவும் இருவரும் கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment