Tuesday, December 17, 2013
மதுரை::இலங்கைக்கு போர்க்கப்பல்களை விற்கும் முடிவிற்கு, தடை கோரிய வழக்கில்,
மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
வழக்கறிஞர்
ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய அரசு, இரண்டு போர்க்கப்பல்களை,
இலங்கைக்கு விற்க திட்டமிட்டு உள்ளது. இது, தமிழகத்தில், இலங்கை அரசின் மீதான,
எதிர்ப்புணர்வை அலட்சியப்படுத்தும் செயல். கப்பல்களை இலங்கை கடற்படை, இந்திய
மீனவர்களுக்கு எதிராக பயன்படுத்தும். இலங்கையை நட்பு நாடு என்று, கூறக் கூடாது என,
தமிழக அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இதுவரை, ராமேஸ்வரம்
மீனவர்கள், 500 பேரை, இலங்கை கடற்படை கொலை செய்துள்ளது. போர்க்கப்பல்களை விற்பனை
செய்தால், இலங்கையின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பதாக அமையும். போர்க்கப்பல்கள்
விற்பனை செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி, மத்திய கேபினட் செயலர், தமிழக தலைமைச்
செயலருக்கு மனு அளித்தேன். இலங்கைக்கு, போர்க்கப்பல்களை விற்பனை செய்ய தடை விதிக்க
வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுதாகர்,
எஸ்.வைத்தியநாதன் கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர்
பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார். நீதிபதிகள், மத்திய பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்
துறை செயலர்கள், இந்திய கடலோர காவல்படை துணை இயக்குனர் ஜெனரல் ஆகியோரை,
எதிர்மனுதாரர்களாக, இணைத்துக்கொள்ள வேண்டும். ஜன., 7ல், பதில் மனு தாக்கல் செய்ய
வேண்டும் என்றனர்.

No comments:
Post a Comment