Pages

Wednesday, December 4, 2013

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள், பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச சமுதாயம் பொறுமை இழந்துவிடக்கூடும்: அமெரிக்கா!

Wednesday, December 04, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள், பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச சமுதாயம் பொறுமை இழந்துவிடக்கூடுமென அமெரிக்கா எச்சரித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான நிஷா தேசாய் பிஸ்வால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 
உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இலங்கை அரசிடம் சர்வதேச நாடுகள் காட்டும் பொறுமை குறைந்து விடும்.
 
குறிப்பாக, பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தனது சொந்தமான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
 
தனது சொந்த நடைமுறைகளின் ஊடாக, இலங்கை இந்த விவகாரங்களுக்குப் பதிலளிக்கும் என்பதையே நாம் விருப்புடன் எதிர்பார்க்கிறோம்.
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கையினால் அதனைச் செய்யமுடியும் என்று நம்புகிறோம்.
 
உண்மையான முன்னேற்றம் இல்லாவிட்டால், அனைத்துலக சமூகத்தின் பொறுமை குறைந்து போகத் தொடங்கி விடும் என்று அவர் கூறியுள்ளார்.
 
அமெரிக்காவும் அமெரிக்க நட்பு நாடுகளும் இதனை வலியுறுத்திவருவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் நிருபர்களுக்கு கூறினார்.

இவ்வாறான முன்னேற்றம் இலங்கையில் ஏற்படுவதற்காக  இலங்கையிலுள்ள எமது நண்பர்களுடன் நாம் மனப்பூர்வமாக வேலை செய்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment