Thursday, December 12, 2013

அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும், சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்திய மகிழ்ச்சிப் பெருவிழா!

Thursday, December 12, 2013
இலங்கை::அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்திய மகிழ்ச்சிப் பெருவிழா நேற்று (11) உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சமுர்த்தி வங்கிக் கட்டட திறப்பு விழாஇ மஹிந்த சிந்தனையின் கீழ் பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கல் மற்றும் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறிய ஆலம்குளம் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான காணி உத்தரவுப்பத்திரம் வழங்கல் என்பன இடம்பெற்றன.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வைஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர்இ அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில்இ அம்பாறை மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் யு.பி.எஸ்.அனுருத்த பியதாச, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ் , யாசிர் ஐமன், ஏ.எல்.முனாப் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா குறிப்பிடுகையில், இன்று வழங்கப்படுகின்ற பதவியுயர்வானது தமது வாழ்வில் மற்றுமொரு பரிணாமத்தை பெறவுள்ளது. இதன்மூலம் இப்பிராந்திய மக்கள் வாழ்வு சிறக்க தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 
மஹிந்த சிந்தனை மூலம் பல்வேறுபட்ட நன்மைகள் தற்போது மக்களுக்கு கிடைத்த வண்ணம் உள்ளன. திவிநெகும திட்டம் மூலம் கிராம எழுச்சி பெற்று வருகின்றன. எமக்கான மனைப் பொருளாதாரத்தினை திட்டமிட்டு நாம் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment