Pages

Tuesday, December 17, 2013

சாரைப்பாம்புக்கு மண்ணெண்ணை பட்டால் ஓடி ஒழிவதுபோல் பிக்குவாகிய எங்களைக் கண்டால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஓடி ஒழிக்கின்றார்: சஞ்சிந்தரிய தேரர்!

Tuesday, December 17, 2013
இலங்கை::சாரைப்பாம்புக்கு மண்ணெண்ணை பட்டால் ஓடி ஒழிவதுபோல் பிக்குவாகிய எங்களைக் கண்டால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஓடி ஒழிக்கின்றார்' அந்த அளவிற்கு தமிழ் மக்கழுக்கு ஆதரவாக செயற்படும் எம்மை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவ்வாறு பார்க்கின்றார். நிலமை இவ்வாறுதான் இருக்கின்றது.
 
என அம்பாறை வித்தியானந்த மாகா பிரிவேனாவின் விஹாராதிபதி சஞ்சிந்தரிய தேரர் தெரிவித்துள்ளார்.
 
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தனை தரமுயர்த்தல் தொடர்பாக மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி கல்முனை வடக்கு தமிழ் மக்களை கல்முனை பொதுக் கட்டிடத்தில் சந்தித்து பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்.
 
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் இன்னும் ஒரு மாத காத்தினுள் தரமுயர்த்தப்டும் என்பதில் எதுவித மாற்றமுமில்லை என்பதில் பொதுமக்களாகிய நீங்கள் என்றென்றும் நம்பிக்கையாக இருங்கள். இதனை நான் உறுதியகாகக் கூறுகின்றேன்;.
 
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் மதங்களின் அடிப்படையில் நாங்கள் இரண்டு சமூகங்களும் ஒன்றுதான். ஆனால் இடைப்பட்ட காலத்தல் வந்த சில இடர்களினால் தமிழ் சிங்கள் மக்களின் உறவுக்குள் விரிசல்கள் ஏற்பட்டன.
 
எனது குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் 14 பேரை ஒரு நாளில் எல்.ரீ.ரீ யினர் வெட்டிக் கொன்றனர். யுத்தத்தின் பாதிப்புக்கள் அனைவருக்கும் உண்டுதான் எனவே நாம் அனைவரும் பழையவற்றினையெல்லாம் மறந்து தற்போதைய சமாதான காலத்தில் அனைவரும் இணைந்து புது யுகம் படைப்போம்.
 
தற்போதைய நிலையில் தமிழ் மக்களைப் பெறுத்த மட்டில் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. அரசியல் பிரச்சனை , காணிப்பிரசசனை , கல்விப் பிரச்சனை, நிருவாகப் பிரசசனை, போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் கடந்த கால யுத்தத்தினைக் காரணம் காட்டி தமிழ் மக்களின் சுதந்திரம் பறிக்கப் பட்டன. இதனை இனிமேலும் விட்டுவிட முடியாது.
 
முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசாங்கத்தின் பக்கமிருந்து அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு பல வேலைத் திட்டங்களை செய்து வருகின்றார்கள். ஆனால் அந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் தமிழ் மக்களை வெறுத்து ஒதுக்கும் நோக்கத்துடன் பார்க்கக் கூடாது.
 
கல்முனையில் ஒரு தமிழ் பிரதேச செயலகம் அமைவதை முஸ்லிம் அரசியல் வாதிகள் எதிர்க்கின்றானார்கள் இது ஏன் எனத் தெரியாதுள்ளது. 'சாரைப்பாம்புக்கு மண்ணெண்ணை பட்டால் ஓடி ஒழிவதுபோல் பிக்குவாகிய எங்களைக் கண்டால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஓடி ஒழிக்கின்றார்' அந்த அளவிற்கு தமிழ் மக்கழுக்கு ஆதரவாக செயற்படும் எம்மை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவ்வாறு பார்க்கின்றார். நிலமை இவ்வாறுதான் இருக்கின்றது.
எது எவ்வாறு அமைந்தலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு நாங்கள் எந்த நேரமும் பிக்குவாகிய நாங்கள் இருக்கின்றோம். எம்மிடம் உங்களது குறைகளைத் தெரிவியுங்கள் எம்மால் முடிந்தளவு எந்த நேரமும் உதவிசெய்வோம்.
 
யார் என்ன சொன்னாலும் எவர் எப்படிக் கூறினாலும் எதிர் வரும் ஜனவரி மாத்ததிற்குள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும். அதற்குரிய பூர்வாங்க வேலைகள் தற்போது துரிதப் படுத்தப் பட்டுள்ளன. என அவர் இவ்வாறு தெரிவித்தார்

No comments:

Post a Comment