Sunday, December 08, 2013
இலங்கை::இயக்கங்கள் உருவானபோதே பல பத்தாக உருவாகியதுபோல முதன்முதலாக உருவாகிய வடமாகாண சபையின் பதவிப்பிரமாண நிகழ்வுகளும் பலபத்து திசைகளிலே நடந்தேறியது. அமைச்சுப் பதவி பகிர்வுகள் தொடர்பாக இழுபறிகளும் கோபதாபங்களும் வஞ்சம்தீர்ப்புக்களுமே இதற்கு காரணமாகும். இதனூடாக சபை உறுப்பினர்களின் கூட்டுப்பொறுப்பு என்பது முளையிலேயே கருகிவிட்டமையானது வட மாகணசபைக்கான ஒரு அபசகுனம்தான்போலும். முதலமைச்சர் சர்வாதிகாரியாக நடக்கிறார் என மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி எழிலன் சுட்டுவிரல் நீட்டும் அளவிற்கு உட்கட்சி ஒற்றுமைகள் சந்திசிரிக்கின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் யாழ்விஜயத்தின்போது மாவை சேனாதிராஜாவை சந்திக்கவிடாது முதல்வரும் சுமந்திரனும் பண்ணிய சதிவலைகள் எல்லாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது அந்திம காலங்களில் தள்ளாடுவதை நன்கே புலப்படுத்துகின்றன. இந்த பூசல்களின் உச்சம் வடமாகாண சபையை நிர்மூலமாக்கும் கைங்கரியத்தில்தான் வந்து முடியப்போகிறது என்பதுதான் வேதனையான விடயம்.
தமிஸழம் கேட்டவர்கள் ஒரு மாகாண சபையை கூட நடத்தமுடியாமல் திக்குமுக்காடு வதை எண்ணி தமிழராய் பிறந்த ஒவ்வொரு வரும் வெட்கப்பட வேண்டும். ஆட்சி நடத்துவது என்பதும் மக்களின் குறைநிறை களை தீர்ப்பது என்பதும் அவ்வளவு எளிதான காரியங்களல்ல. விமர் சனம் பண்ணுவது இலகு வானது. சுமார் அறுபது வருடகால அரசியல் வரலாறு கொண்ட தமிழரசு கட்சியினரை பொறுத்தவரையில் அவர்கள் ஒருபோதும் ஆட்சி நடத்தவில்லை. விமர்சிப்பதும சவால்விடுவதுமே அவர்களின் அரசியலாக இருந்து வந்திருக்கிறது. மக்களுக்கு சேவையாற்றிய அனைவர்மீதும் துரோகப்பட்டம் சாட்டுவது ஒன்றே தமிழரசு கட்சியினரின் அரசியலின் பிரதானபாகமாகும்.
சிறிமாவை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் கட்டவிட்டுவிடுவோமோ? மட்டக்களப்பு நல்லை யாவை அமைச்சரவையில் நீடிக்க விட்டுவிடுவோமோ?
துரையப்பாவை அடுத்தமுறை மேயராக விட்டுவிடுவோமோ? பிள்ளையானை இரண்டாம் தடவையாக முதலமைச்சராக விட்டுவிடுவோமோ? சங்கரியை வெற்றியடைய விட்டுவிடுவோமா? பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த விட்டுவிடுவோமா? என்று மற்றையோருக்கு சவால்விட மட்டுமே தெரிந்தவர்கள் இந்த கூட்ட மைப்பினர். இவர்கள் ஒருபோதும் சவால்களை ஏற்று அரசியல் செய்தவர்கள் அல்லர். அதனால் தான் கிடைத்த மாகாண சபையைகூட சரியாக இயக்க இவர்களால் முடியவில்லை.
ஆனால் வடமாகாணசபை எதிர் கொண்டிருக்கும் சவால்கள் ஏராளம். வன்னிபிரதேசம் முப்பது வருட கல்வியை தொலைத்து நிற்கிறது. யாழ்ப்பாண விவசாயிகள் தமது மீளுயிர்ப்புக்காக காத்துக்கிடக் கிறார்கள். கரையோர மீனவர்கள் இந்திய மீனவர்களுடன் அன்றாடம் அல்லல்படுகிறார்கள். இதற்கிடையில் யுத்தத்தின் விளைவுகளான விதவைகளும் அங்கவீனர்களும் ஆயிரக்கணக்கான வாழ்வின் விளிம்புக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவைபற்றியெல்லாம் வடமாகாணசபை கிஞ்சித்தேனும் இன்னும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்த சவால்களை எதிர் கொண்டு பயணிக்க கூட்டமைப்பினருக்கு அக்கறையில்லை. தமது குடும்ப சண்டைகளின் துர்நாற்றம் மக்களுக்கு தெரிந்துவிடாமல் இருக்க அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டே காலம் கடத்த முயல்கின்றனர். அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் முன்வைக்கப்பட்ட போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வடமாகாணசபைக்கு மேலதிக நிதிகோரவுள்ளதாக அறிவித்தார். இவையனைத்தும் அரசின்மேல் பழியைபோட்டு தாம் தப்பிக்கொள்ளும் முயற்சியாகும்.
அரசு மற்றைய அனைத்து மாகாணங்களையும் விட வடமாகாணத்துக்கே கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது. வடமாகாணத்திற்கு ரூபா 5.831 மில்லியனும், சப்ரகமுவ மாகா ணத்திற்கு ரூபா 4.580 மில்லி யனும், மத்திய மாகாணத்திற்கு ரூபா 3.927 மில்லியனும், ஊவா மாகாணத்திற்கும் ரூபா 3.873 மில்லியனும், கிழக்கு மாகாணத்திற்கு ரூபா 3.546 மில்லியனும், வட மத்திய மாகாணத்திற்கு ருபா 3.393 மில் லியனும், மேல் மாகாணத்திற்கு ரூபா 2.755 மில்லியனும், வட மேல்மாகாணத்திற்கு ரூபா 2.470 மில்லியனும், தென் மாகாணத்திற்கு ரூபா 2.095 மில்லியனும் ஒதுக்கப் பட்டுள்ளன என்கிற உண்மை களை மறைக்கும் முயற்சியே முதலமைச்சரின் பேச்சாகும்.
ஒதுக்கப்பட்ட நிதிகளை உரிய வழிகளில் மக்களுக்கு செலவுசெய்ய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். திட்டங்கள் தீட்டப்படுவதற்கு மக்களின் பிரச்சனைகள் பற்றிய கரிசனையும் கள ஆய்வுகளும் தேவை. ஓய்வு ஒழிச்சலற்ற உழைப்பு அவசியமானது. எருக்கலம் பிட்டியிலிருந்து தண்ணீருற்று வரைக்கும் பருத்தித்து றையிலிருந்து பண்டாரிகுளம் வரைக்கும் மக்களின் தேவைகளை அறிய சென்று வரவேண்டும். பென்சனியர்மாரால் நிரப்பப்பட்டிருக்கும் வட மாகாண சபைக்கு இவையெல்லாம் ஏழாம்பொருத்த மானவை. வடமாகாண சபையைகூட யாழ்ப்பா ணத்தைவிட்டு வெளிமாவட்டத்துக்குள் அமைக்க இடந்தராத மேட்டுக் குடிகள் எப்படி ஏழை மக்களின் வாசல் தேடி அபிவிருத்தி செய்யபோ கிறார்கள்?
இந்த தொல்லைகள் வேண்டாம் என்பதே யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் இணைத்தலைவர் பதவியை முதலமைச்சர் ஏற்க மறுத்ததன் பின்புலமாகும். தேர்தலுக்கு முன்னர் வடமாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறிக்கு வழங்கப்பட்டு இருந்த இணைத் தலைவர் பதவிப் பொறுப்பு இப்போது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கெடுக்க மாட்டாமைக்கு மகிந்த சிந்தனையின் காவலராக தன்னால் இயங்கமுடியாது என்று முதல்வர் சொல்லும் காரணம் மக்களின் காதுகளில் பூ சுற்றும் நடவடிககையாகும். மகிந்த சிந்தனைதான் நாடுமுழுக்க செயல்படுத்தப்படுகிறது. ஜனாதிபதி இந்த நாட்டு மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டவர்.
வடமாகாணமும் இலங்கைக்குள்தான் இருக்கிறது. தமிழ் மக்களும் செலுத்துகின்ற வரிப்பணம் இலங்கையரசுக்குத்தான் செல்லுகின்றது. இதே ஜனாதிபதியிடம் சென்றுதான் முதலமைச்சரும் பதவிப் பிரமாணம் செய்து வந்தார். மகிந்தசிந்தனையின் கீழ் செயல்படும் சமூர்த்தி கிராம எழுச்சி மற்று பலவிதமான நல்வாழ்வு திட்டங்கள் ஒன்றும் தீண்டதகாதவையல்ல.
அவற்றின் பெயரால் மீண்டுவரும் லட்சக்கணக்கான தமிழ் குடும்பங்கள் உண்டு. இச்செயன்முறைகளில் சம்பளம் பெறும் ஆயிரக்கணக்கான தமிழ் உத்தியோகஸ்தர்களின் வாழ்வாதாரமே மகிந்த சிந்தனையால் தான் காப்பாற்றபடுகிறது. வாழ்நாளெல்லாம் ‘சிங்கள’ அரசுக்கு சேவகம் செய்துவிட்டு இன்று முன்னாள் நீதியரசருக்குரிய ஓய்வூதியம் பெறுகின்ற முதல்வருக்கு வேண்டுமானால் இந்தவிதமான ஸ்டன்ட் அறிக்கைகள் விளையாட்டாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு அவை ஜீவனாம்ச பிரச்சினைகள் ஆகும் தவிர மகிந்த சிந்தனை எந்தெந்த புள்ளிகளில் தமிழ் மக்களுக்கு எதிராகவுள்ளது என்பதை முதலமைச்சர் விளக்கவேண்டும்.
ஆளுநருக்கு அதிகாரமா? முதல்வருக்கு அதிகாரமா? என்று ஒருபுறம் கேள்வி எழுப்பிகொண்டு இதுவரை காலமும் ஆளுநர் வகித்த அந்த பொறுப்பை தமக்கு வழங்க ஜனாதிபதி வழங்க முன்வரும்போது அதை புறங்கையால் தட்டிவிட முனைவது சுத்தமான கையாலாகத்தனமாகும். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்பது பிரதேசசபை, மாகாணசபை பாராளுமன்று போன்ற அனைத்தினூடாகவும் அந்தந்த மாவட்டம் சார்ந்த ஒதுக்கப்படுகின்ற நிதிகளை போடப்படுகின்ற திட்டங்களை ஒருங்கிணைக்கின்ற ஒரு பொறி முறையாகும். இந்த பொறிமுறையில் பங்கெடுத்து தலைமையேற்று நடத்துவதென்பதுவும் அதிகாரங்களை கையகப்படுத்தும் முக்கிய செயல்பாடுகள்தான்.
இதுபோன்ற அபிவிருத்தி மையங்களில் பங்கெடுத்து ஒதுங்குவது முதல்வர் தமக்கு வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பெரும்துரோகமாகும். அரசின்கீழ் நடத்தப்படும் அனைத்து தேர்தல்களிலும் பங்கெடுக்கமுடியுமென்றால் எம்பி பதவிகளும் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் பதவிகளை பெறமுடியுமென்றால் அதற்கான கெளரவங்கள் சம்பளங்கள் சொகுசு வாகன கோட்டாக்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள “சிங்கள’ அரசின் முன் நிற்கமுடியும் ஆனால் மக்களின் அபிவிருத்தி பணிகளில்மட்டும் மகிந்த சிந்தனை கறைபட்டு தங்களின் புனிதம் கெட்டுவிடும். எத்தனை காலத்துக்குத்தான் எமது மக்களும் வேடதாரி அரசியலுக்கு வாக்களிக்க போகிறார்கள்? இந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது கூட்டமைப்பல்ல கூத்தமைப்புத்தான் என்பது நிரூபணமாகும் தருணங்கள் மிக விரைவில் வரத்தான்போகிறது.





No comments:
Post a Comment