Pages

Thursday, December 5, 2013

வவுனியாவில் தனிமையில் இருந்த வயோதிபப் பெண் மீது துப்பாக்கிச்சூடு!

Thursday, December 05, 2013
இலங்கை::வவுனியா – மன்னார் பிரதான வீதி யாழ். ஐஸ்கிறீம் வீதி பகுதி வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

நேற்று இரவு 8.40 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 60 வயதுடைய சற்குணசேயோன் பாலசுந்தரி என்ற பெண் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தனிமையில் இருந்த இப் பெண் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதன் காரணமாக இப்பெண் கால் பகுதியில் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment