Sunday, December 08, 2013
இலங்கை::மொனராகல மாவட்டத்தில் உள்ள படல்கும்புர பிரதேச மக்களின் நலன் கருதி புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச சபைக் காரியாலயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) திறந்து வைத்தார்.
2011 ஆம் ஆண்டு புத்தளையில் நடைபெற்ற 'தேசத்துக்கு மகுடம்' கண்காட்சிக்கான அபிவிருத்தி நடவடிக்கையின்போது இந்த பிரதேச சபைக் காரியாலயம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இரு மாடிகளைக் கொண்ட இக்கட்டடம் 15 மில்லியன் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் ஊவா மாகாண ஆளுநர் நந்த மெதிவ், முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



No comments:
Post a Comment