Tuesday, December 17, 2013

இலங்கை இராணுவம் மாகாணசபைகளுக்கு கட்டுப்பட அவசியமில்லை: கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் வெறுமனே அரசியல் நலன் சார்ந்தவை: மேஜர் ஜெனரல் உதய பெரேரா!

Tuesday, December 17, 2013
இலங்கை::பயங்கரவாதத்துக்கு எதிராக போர்க்காலத்தில் இலங்கை இராணுவம் போரிட்டது. தற்போது அதே இராணுவம் அபிவிருத்திக்காக பாடுபடுகிறது என்று கிளிநொச்சி இராணுவப் படையினர் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
 
மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும் மீண்டும் ஒருமுறை பயங்கரவாத ஆயுதப் போராட்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் படையினர் கவனமாக இருப்பதாக உதய பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கு மாகாணசபையில் ஆட்சியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக உள்ளது என்று கூறிவருகிறது.
 
எனினும் இலங்கை இராணுவம் மாகாணசபைகளுக்கு கட்டுப்பட அவசியமில்லை.
 
மத்திய அரசாங்கம் அதுவும் ஜனாதிபதியே இராணுவத்துக்கு தளபதியாக இருக்கிறார். எனவே கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் வெறுமனே அரசியல் நலன் சார்ந்தவை என்று பெரேரா குறிப்பிடடுள்ளர்.
 
புலிகள்  ஆதரவு  புலம்பெயர்ந்தவர்களின் நலன்களும் இதில் அடங்கியுள்ளன என்று பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment