Pages

Tuesday, December 10, 2013

மன்னாரில் இரு தொகுதி கேரள கஞ்ஞா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன!

Tuesday 10 December 2013
இலங்கை::மன்னாரில் இரு தொகுதி கேரள கஞ்ஞா பொதிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில்  (09.12.2013) காலை இது கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
மன்னார் பிரதேச பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
 
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் தாராபுரம் பகுதியில் 200 கிராம் எடையுடைய
கேரள கஞ்ஞா பொதியும் அதே வீதியின் எழுத்தூர் சந்தியில் 500 கிராம் எடையுடைய கேரள கஞ்ஞா பொதியும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

No comments:

Post a Comment