Pages

Thursday, December 12, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கென்யாவிற்கு விஜயம்!

Thursday, December 12, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கென்யாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
 
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின்  இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கென்யாவுக்கான நான்கு நாள் விஜயத்தை ஆரம்பித்து நேற்று நைரோபி நகரை சென்றடைந்தார்.

ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் கென்யா ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா, பிரதி ஜனாதிபதி வில்லியம் ருடோ, கென்ய வெளிநாட்டு வர்த்தக அமைச்சின் அமைச்சரவை செயலாளர் அமீனா மொஹமட் ஆகியோரால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வரவேற்கப்பட்டார்.

இங்கு ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. நாளை கென்யாவில் நடைபெறும் சுதந்திர தின விழாவிலும் ஜனாதிபதி கலந்துக் கொள்வார்.

சுமார்
50வருடங்களின் பின்னர் இம்முறை கென்ய சுதந்திர விழா மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. எனவே இலங்கை ஜனாதிபதி உட்பட  சுமார் 15
நாடுகளின் தலைவர்கள் இந்த சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும்
14
ஆம் திகதி கென்ய ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இந்த சந்திப்பின் போது பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன. அதனையடுத்து பல்வேறு வைபவங்களிலும் ஜனாதிபதி கலந்துக் கொள்வார்.
வர்த்தகம், சுற்றுலாத்துறை, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது விஜயமாக இந்த விஜயம் அமைந்துள்ளது.
 

No comments:

Post a Comment