Pages

Tuesday, December 10, 2013

காதலர் சுகம் அனுபவிக்க கட்டணம் அறவிட்ட தனியார் பஸ் : போக்குவரத்து அனுமதிப்பத்திரம் ரத்து!

Tuesday 10 December 2013
இலங்கை::குருணாகலையில் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு காதல் சுகம் அனுபவிக்க பணம் பெற்றுக் கொண்டு பஸ் வண்டியில் இடமளித்த பஸ் வண்டியொன்றின் அனுமதிப்பத்திரத்
தை வடமேல் மாகாண பொது மக்கள் போக்குவரத்து அதிகார சபை ரத்து செய்துள்ளது.
 
பயண நேரம் வரை தரிப்பிடமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பஸ் வண்டியிலேயே பாடசாலை மாணவ, மாணவிகளான காதல் ஜோடிகளுக்கு காதல் சுகம் அனுபவிக்க இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு இடமளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கடந்த வாரம் குருணாகலை சிலாபம் வீதியின் முன்னேஸ்வரத்தில் இரண்டு பெண்கள் உயிரிழக்கக் காரணமாக விருந்த பஸ் வண்டியின் அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்பட்டதாக அதிகார சபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment