Tuesday 10 December 2013
மருத்துவம் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒரு மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம். இது அனைத்து மக்களும் அங்கீகரிக்கக்கூடிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றவை.
சென்னை::ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதுடன் பிறரையும் வாழவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக டிச. 10ம் தேதிஇ மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்துவதே இதன் நோக்கம். 1948இ டிச.10ம் தேதி ஐக்கிய நாடுகளின் பொது சபையால் உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் விதத்தில் 1950ல் இத்தினம் தொடங்கப்பட்டது.
உலகில் வாழும் அனைத்து மனிதர்தர்களும் சமமானவர்களே. ஒருவரிடமிருந்து நாம் எவ்வித உரிமையை எதிர்பார்க்கிறோமோ அதே உரிமையை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். யாரும் யாரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
எது மனித உரிமை்
ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான மனித உரிமைகள் வந்து விடுகின்றன. உயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்து சுதந்திரம் மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான கல்வி
மருத்துவம் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒரு மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம். இது அனைத்து மக்களும் அங்கீகரிக்கக்கூடிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றவை.

No comments:
Post a Comment