Pages

Tuesday, December 10, 2013

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பி.கே.காமினி நவரத்ன நியமம்!

Tuesday 10 December 2013
இலங்கை::பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் இன்று மலேசியாவிற்கு விஜயம் செய்வதால் அவர் நாட்டுக்கு திரும்பி வரும்வரை பதில் பொலிஸ் மா அதிபராக காமினி நவரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் இன்று செவ்வாய்க்கிழமை மலேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையிலேயே, பதில் பொலிஸ் மா அதிபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேஷியாவில் நடைபெறவுள்ள பொலிஸ் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன்  மலேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
 

No comments:

Post a Comment