Wednesday, December 18, 2013

டேவிட் கமரூன் புலி ஆதரவு கட்சிகளின் கருத்துக்களையே கேட்கின்றார்: அமைச்சர் ஜோன் செனவிரட்ன!

Wednesday, December 18, 2013
இலங்கை::பிரிட்டன் பிரதமர் புலி ஆதரவு கட்சிகளின் கருத்துக்களையே கேட்கின்றார் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
 
ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்டபட்ட அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.
 
மாறாக, பயங்கரவாத அமைப்பான  புலிகளுக்கு ஆதரவாக இயங்கிய அரசியல் கட்சிகளுக்கே செவிமடுக்கின்றார்.
 
பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன், மாநாட்டை விடவும் யாழ்ப்பாணம் விஜயம் செய்வதனை முக்கிய இலக்காக் கொண்டிருந்தார்.
 
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த டேவிட் கமரூன் ஓர் ராஜதந்திரியைப் போன்று செயற்படவில்லை.
 
யாழ்ப்பாணத்தில் அரசாங்க பிரதிநிதிகளை புறக்கணித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை மட்டுமே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என அமைச்சர் செனவிரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment