Pages

Saturday, December 14, 2013

இந்தியாவில் முதல்முறையாக இடுப்புக்கு கீழே ஒட்டி பிறந்த குழந்தையை பிரிக்கும் ஆபரேஷன்!!

Saturday, December 14, 2013
சென்னை::தான்சானியா நாட்டை சேர்ந்த கிரேஷ் தம்பதிகளுக்கு கடந்த 9 மாதம் முன், இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளின் தலை, கை, கால் தனியாக இருந்தாலும், முதுகு தண்டின் கீழ் பகுதியில் இருந்து சிறுநீர் பாதை, மலக்குடல் மற்றும் மலத்துவாரம் ஒன்றாக இணைந்து காணப்பட்டது. எரிகா மற்றும் எல்யூடி என பெயர் வைக்கப்பட்டன. அந்த குழந்தைகள் பிறந்தது முதல் ஒட்டியே இருந்தன.

தான்சானியா நாட்டில் சுகாதார வளர்ச்சி மிக குறைவு என்பதால், சென்னையில் உள்ள அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை டாக்டர்களை தொடர்பு கொண்டு அந்நாட்டு டாக்டர்கள் பேசினர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் இரட்டை குழந்தை சென்னை அழைத்து வரப்பட்டனர். டாக்டர்கள் தீவிர பரிசோதனை செய்து, தற்போது குழந்தையை தனித்தனியாக பிரித்து எடுக்க முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை துறை டாக்டர் வெங்கட் ஸ்ரீபதி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோஷினி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பிறக்கும்போது இணை ந்து பிறந்த 9 மாத குழந்தைகள் ஒவ்வொன்றும் தற்போது 8 கிலோ எடையுடன் உள்ளனர். முதுகெலும்பின் கீழ்பக்கத்தில் இருந்து ஒன்றோடு ஒன்று ஒட்டியுள்ளது. ஒரே ஒரு ஆண் குறி மட்டுமே உள்ளது. சிறுநீர், மற்றும் மலம் கழிக்கும் பாதையும் இருவருக்கும் ஒன்றாக உள்ளது.

இணைந்த பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி வருகிற திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டு, சரியாக 9 மணிக்கு ஆபரேஷன் தொடங்கும். எப்படியும் 18 மணி நேரத்தில் இருந்து 20 மணி நேரம் ஆபரேஷன் நடைபெறும். இதில் அப்போலோ டாக்டர்கள் மட்டுமின்றி சென்னையில் உள்ள பிரபல டாக்டர்கள் சுமார் 25 பேர் பங்கேற்பார்கள். இந்தியாவில் இதுபோன்று கீழ் பகுதிகள் ஒட்டியே பிறந்த குழந்தைகளை ஆபரேஷன் செய்து பிரிப்பது இதுதான் முதன் முறை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தான்சானியா அரசு ரூ.40 லட்சம் வழங்கியது:

9 மாதமே ஆன இரட்டை குழந்தைகளான எரிகா மற்றும் எல்யூடிவின் பெற்றோர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர். மலைஜாதியை சேர்ந்தவர்கள். பெற்றோர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை பிரிக்கும் ஆபரேஷனுக்கு தான்ஸானியா அரசு ஸீ 40 லட்சம் மருத்துவ செலவுக்காக வழங்க முன் வந்துள்ளது. ஆனால் குழந்தைகளை பிரிப்பதற்கான தொடர் சிகிச்சைக்கு இதைவிட கூடுதல் செலவாகும் என்று கூறப்படுகிறது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் பணத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், குழந்தைகளை தனித்தனியாக பிரித்து மற்ற குழந்தைகளை போல இவர்களும் வாழ வேண்டும் என்ற முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment