Pages

Friday, December 13, 2013

தேசியக் கொடிக்கு அபகீர்த்தி ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: பீ.பி. அபயகோன்!

Friday, December 13, 2013
இலங்கை::தேசிய கொடியின் பயன்பாடு குறித்து வடக்கு கிழக்கு மாகாண ஆளுனர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வட மாகாணசபையின் உறுப்பினர்கள் தேசியக் கொடியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு பொதுநிர்வாக அமைச்சு, ஆளுனரை அறிவுறுத்தியுள்ளது.

தேசிய கொடிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் எவரும் செயற்படக் கூடாது என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார். தேசியக் கொடிக்கு அபகீர்த்தி ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணசபையின் சில அமைச்சர்கள் திட்டமிட்டு தேசிய கொடியை அவமரியாதை செய்த சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேசிய கொடி பயன்பாடு குறித்த அரசாங்க சுற்றுநிருபம் மீளவும் நினைவூட்டப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment