Wednesday, December 11, 2013

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான தொடர் விசாரணையை கண்காணிக்க வேண்டுமென கோரும், பேரறிவாளனின் மனு தள்ளுபடி!

Wednesday, December 11, 2013
சென்னை::முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான தொடர் விசாரணையை கண்காணிக்க வேண்டுமென கோரும், பேரறிவாளனின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது வேலூர் மத்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சென்னையிலுள்ள தடா சிறப்பு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
 
அந்த மனுவில், தனது புலன் விசாரணை உரிய முறையில் நடத்தப்படவில்லை எனவும், ராஜிவ் கொலை வழக்குடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை எனவும் பேரறிவாளன் தெரிவித்திருந்தார்.
 
எனவே அதனுடன் தொடர்புடையவர்கள் குறித்து முறையான புலன் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிடுவதோடு, அந்த விசாரணையை கண்காணிக்க வேண்டுமெனவும் பேரறிவாளன் அந்த மனுவினூடாக கோரியிருந்தார்.
 
இந்த மனு தொடர்பான இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த தடா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், மனுவை நேற்று தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

No comments:

Post a Comment