Monday, December 9, 2013

குருணாகல் கிரிபாவ பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

Monday, December 09, 2013
இலங்கை::குருணாகல் கிரிபாவ பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
தம்புத்தேகமவிலிருந்து பாலுவெவ பகுதி நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் கரிபாவ பாலுவெவ பகுதியில் கவிழ்ந்துள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றது
 
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி நிக்கவரெட்டிய பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
31 வயதான டபிள்யூ.எம். செனரத் என்ற பொலிஸ் அதிகாரியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிரிபெவ வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment