Pages

Tuesday, December 17, 2013

அம்பாறை மாவட்டத்தின் மல்லிகைத்தீவுக் கிராமத்துக்கான நீர்வழங்கல் திட்டத் திறப்பு விழா: பிரதம அதிதியாக கிழக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல்!

Tuesday, December 17, 2013
இலங்கை::அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவுக் கிராமத்துக்கான -நீர்வழங்கல் திட்டத் திறப்பு விழா நேற்று (16) மாலை அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி; உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாட் தலைமையில் நடைபெற்றது.
 
இந்த விழாவின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் கலந்து கொண்டார்.
 
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், முதலமைச்சர் அலுவலகத்தின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எ.மன்சூர், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், சம்மாந்துறைப் பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், ஜெய்க்கா திட்ட பொறியியலாளர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
மல்லிகைத்தீவுக் கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரினை பெற்றக் கொடுக்கும் நோக்கடன் கிழக்கு மாகாண குடிநீர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா திட்டத்தின் 10 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டம் மக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன.

No comments:

Post a Comment